விண்வெளி வீரர் மீது கோபத்தை காட்டும் எதிர்க்கட்சிகள் - மத்திய அமைச்சர்

Update: 2025-08-19 03:21 GMT

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா மீது எதிர்க்கட்சியினர் கோபத்தை வெளிப்படுத்துவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றம்சாட்டினார். சர்வதேச விண்வெளி மையம் சென்று நாடு திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு மக்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காமல் வாக்குத்திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து முழக்கங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனை குறிப்பிட்டு பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், எதிர்க்கட்சிகளின் கோபம் இந்திய விமானப்படையின் வீரரான ஒரு விண்வெளி வீரரை நோக்கி நீள வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். பின்னர் சுபான்ஷு சுக்லாவை பாராட்டி பேசி, ஜிதேந்திர சிங் தனது உரையை நிறைவு செய்தார். அதன் பிறகும், எதிர்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்