ஒரே போன் கால்.. | கோடிகளில் சுருட்டிய ஆன்லைன் கும்பல்.. | உஷார் மக்களே..
ஆன்லைன் மூலம் மூதாட்டியிடம் ரூ.2.80 கோடி மோசடி
கேரளாவை சேர்ந்த மூதாட்டியிடம், ஆன்லைன் மூலம் ஒரு கும்பல், 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எர்ணாகுளம் மாவட்டம் மட்டாஞ்சேரியை சேர்ந்த மூதாட்டியிடம், கடந்த ஜூலை 10-ம் தேதி, டெல்லி குற்றப்பிரிவு அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி தொடர்பு கொண்ட மோசடி கும்பல், முன்னாள் ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல் சம்பந்தப்பட்ட 538 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் 25 லட்சம் ரூபாய் கமிஷனாக பெற்றதாகவும் மூதாட்டியை நம்ப வைத்துள்ளனர். இதற்காக, ஒரு ஆன்லைன் நீதிமன்றம் அமைத்த மோசடி கும்பல், வழக்கில் இருந்து விடுவிக்க மூதாட்டியிடம் ஆறு தவணைகளில் இரண்டு கோடியே 80 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது. இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.