கேரளாவில், ஓணம் பண்டிகை களைகட்டிய நிலையில், அங்கு எண்ணுற்று இருபத்து ஆறு கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் எழுநூற்று எழுபத்து ஆறு கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆன நிலையில், இந்தாண்டு ஓணம் பண்டிகைக்கு எண்ணுற்று இருபத்து ஆறு கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 50 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.
இதேபோல, ஓணத்திற்கு முதல் நாளான உத்திராட நாளில் கடந்த ஆண்டில், நூற்று 26 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்ற நிலையில், இந்தாண்டில் நூற்று 37 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட கூடுதலாக 11 கோடி ரூபாய் மதுவிற்பனை ஆகும். குறிப்பாக, மாநிலத்திலேயே கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளி பகுதியில் உள்ள அரசின் சில்லறை மதுவிற்பனை கடையில் மட்டும், ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது.