தர்மஸ்தலா மரண குழியில் புது திருப்பம்.. ``புதைத்த இடத்தில் உடல்கள் இல்லை..''
கர்நாடகாவின் தர்மஸ்தலாவில் 100க்கும் மேற்பட்ட உடல்கள் புதைத்ததாக கூறப்படும் விவகாரத்தில், புகார்தாரர் குறிப்பிட்டிருந்த முதல் இடத்தில் எந்த தடயமும் கிடைக்கவில்லை. புகார்தாரர் அடையாளம் காட்டியிருந்த 13 இடங்களை வரிசைப்படுத்திய சிறப்பு புலனாய்வு குழு போலீசார், முதல் இடத்தில் தோண்டும் பணியை தொடங்கினர். மழைக்கு இடையிலும் தோண்டும் பணி நடைபெற்றது.. ஆனால் கிட்டத்தட்ட 4 அடி தோண்டியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதனால் மேலும் ஆழமாகவும், அகலமாகவும் தோண்ட போலீசார் முடிவு செய்து, மினி பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து தோண்டும் பணி தொடந்தது. சுமார் 15 அடி அகலமும், 7 அடி ஆழமும் தோண்டப்பட்டது. இருப்பினும் பிணத்தை புதைத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாததால், தோண்டும் பணி முடித்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 2 வது இடத்தில் தோண்டும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்..