Mumbai rain | Landslide | Heavy Rain | மும்பையில் பயங்கரம் - 2 பேர் உயிரிழப்பு
கனமழையால் நிலச்சரிவு - 2 பேர் உயிரிழப்பு
மும்பையின் விக்ரோலி பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து விக்ரோலி பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மும்பையில் கடந்த 5 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர் மழை, வெள்ள பாதிப்புகளால் மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.