இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பேரழகி! ஒவர்நைட்டில் பேமஸாகி மறுநாளே முடங்கிய லைப்!அழகே ஆபத்தானது
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் “ப்ரவுன் ப்யூட்டி“ என்று செல்லமாக அழைக்கப்பட்ட மோனலிசா என்ற இளம்பெண்ணுக்கு அழகே ஆபத்தாக மாறி விட்டது... மாநிறம்...காந்தக் கண்கள்...எளிமையான தோற்றம்... வெள்ளையாய் இருந்தால் தான் அழகு என்ற பொய்யான எண்ணத்தைத் தவிடுபொடியாக்கிய பேரழகி என்றே சொல்லலாம் இந்த மோனலிசா போஸ்லேவை... ருத்ராட்ச மாலைகள் விற்கும் மோனலிசாவிடம் கும்பமேளா கூட்டத்தையே திரும்பிப் பார்க்க வைக்குமளவு ஏதோ காந்த சக்தி நிச்சயம் உள்ளது...