பிக்பாஸ் பிரபலத்துடன் காதலா? - சிராஜை சுற்றும் காதல் கிசுகிசு

Update: 2025-01-30 02:32 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜும் ( Mohammed Siraj), ஹிந்தி பிக் பாஸ் புகழ் மஹிரா ஷர்மாவும் ( Mahira Sharma) காதலிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனை மஹிரா சர்மாவின் தாயாரான சாய்னா ஷர்மா (Saina Sharma) முற்றிலும் மறுத்து பேட்டியளித்துள்ளார். முன்னதாக கிரிக்கெட் வீரர் முகமது சிராஜும், பாடகியும்-நடிகையுமான ஜனாய் போஸ்லேவும் (Zanai Bhosle) காதலிப்பதாக பேச்சுகள் கிளம்பின. இதற்கு இருவரும் தாங்கள் சகோதர சகோதரி போல் பழகி வருவதாக தெரிவித்து தங்களது instagram post மூலம் முற்றுப்புள்ளி வைத்திருந்தனர். அதற்குள் தற்போது மீண்டும் முகமது சிராஜை சுற்றி காதல் கிசுகிசுக்கள் கிளம்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்