தலைக்கேறிய போதையில் இளம்பெண்ணிடம் ரகளை - அரசியல் தலைவரின் மகன் அரஸ்ட்..

Update: 2025-07-07 16:48 GMT

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவரின் மகன் மது போதையில் இளம்பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியை சேர்ந்த ஜாவேத் ஷேக் என்பவரின் மகன் ரஹில் ஷேக், மது போதையில் காரை ஓட்டியபோது சாலையில் முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு காரின் மீது மோதியுள்ளார். இதுகுறித்து பாதிப்புக்கு உள்ளான காரில் பயணித்த பெண் ரஹீலிடம் முறையிட்ட போது, அவரிடம் அரை நிர்வாண கோலத்தில் அநாகரீகமாக ரஹீல் நடந்துள்ளார். இதனை அந்த பெண் சமூக ஊடகங்களில் நேரலையாக வெளியிட்டதால் உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரஹீலை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்