தனியார் குழுக்கள், கோவிலின் பெயரைக் கூறி நிதி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைய உள்ள மருதமலை முருகன் கோவிலில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருதமலை மலையை சுற்றி உள்ள குப்பை கழிவுகளை அகற்ற பெருந்திட்டம் மேற்கொள்ளப்படும் என கூறினார். அத்துடன் கோவில் பெயரில் நிதி வசூலிப்பது சட்டவிரோதம் என்று தெரிவித்தார்.