மணிப்பூரில் ஓடும் இம்பால் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், கரையைக் கடந்து ஊருக்குள் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் இம்பால் நகரில் விளைநிலங்களை வெள்ளம் சூழ்ந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது. குடியிருப்புகளையும் வெள்ளம் மூழ்கடித்ததால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். வட மாநிலங்களில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.