வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி மிகவும் காலதாமதமாக பயணித்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
மணிப்பூரில் குகி, மைதேயி பிரிவினர் இடையே கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளான நிலையில், பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.இதை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட அறிக்கையில்,
மணிப்பூரில் 864 நாட்கள் நடைபெற்ற வன்முறையில் 300 பேர் உயிரிழந்ததுடன், 1,500 பேர் காயமடைந்ததாக வேதனை தெரிவித்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் பிரதமர் மோடி 46 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதாக கூறிய கார்கே, சொந்த நாட்டு மக்களுக்கு ஆதரவாக 2 வார்த்தை கூட இதுவரை அவர் பேசவில்லை என குற்றம்சாட்டினார்.