கும்பமேளாவை சாடி மல்லிகார்ஜுன கார்கே சர்ச்சை பேச்சு..

Update: 2025-01-28 07:51 GMT

கும்பமேளாவில் நீராடுவதால் வறுமை ஒழிக்கப்படுமா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது, சர்ச்சையை ஏற்படுத்திது. மத்திய பிரதேசத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜக தலைவர்கள் மகா கும்பமேளாவில், கங்கையில் போட்டிப் போட்டுக் கொண்டு புனித நீராடுவதால் வறுமை ஒழிக்கப்பட்டு விடுமா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து தனது இந்த கருத்து யாரையும் புண்படுத்தினால், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் மேடையிலேயே தெரிவித்தார். இருப்பினும், இவரது இந்த பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்