இந்த வாய்ப்பை நழுவ விட்டால் அடுத்த 144 ஆண்டு பார்க்க முடியாது..நெருங்கும் நாட்கள்..கூடும் மக்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா நிறைவடைய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கிய இவ்விழா, வரும் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. 59 கோடியே 31 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.