கும்பமேளாவில் தொலைந்த தமிழக பெண்கள் - கிடைத்த முக்கிய தகவல்
உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக தென்காசியில் இருந்து சென்ற பெண்கள் இருவர் அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி தொலைந்து போன நிலையில், தமிழரின் உதவியால் இன்று சொந்த ஊர் திரும்பி உள்ளனர். 40 பேர் கொண்ட குழுவினால் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி உத்திர பிரதேசத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றிருந்த நிலையில், அங்கு தொலைந்து போன ராமலக்ஷ்மி, கஸ்தூரி ஆகிய இரண்டு பெண்களும் தாங்கள் உதவி கேட்டும் காவலர்கள் உதவ முன் வராத நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த மதன் குமார் என்ற தமிழர் தங்களுக்கு ரயில் டிக்கெட் வாங்கி கொடுத்து, தாங்கள் மீண்டும் வீடு திரும்ப உதவியதாக கூறினர்.