ஆன்லைன் விளையாட்டில் ரூ.14 லட்சம் இழப்பு- சிறுவன் தற்கொலை

Update: 2025-09-17 05:57 GMT

ஆன்லைன் விளையாட்டில் 14 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை அடுத்த மோகன்லால் கஞ்ச் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் யாஷ். இவர் தனது தந்தை நிலத்தை விற்று வீடு கட்டுவதற்காக வங்கி டெபாசிட்டில் வைத்திருந்த 14 லட்சம் ரூபாய் பணத்தை “ஃப்ரீ பயர்“ எனும் ஆன்லைன் விளையாட்டில் இழந்துள்ளார். இதனையடுத்து பணம் இழந்தது தந்தைக்கு தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்