Lorry Accident | கரும்பு லாரி மோதி ஸ்பாட்டிலேயே தம்பதி பலி.. சிக்கிய குழந்தை
கரும்பு லாரி மோதி விபத்து - இ.ரிக்ஷாவில் சென்ற தம்பதி பலி
உத்தர பிரதேச மாநிலம் பஸ்தி பகுதியில் கரும்பு லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, இ-ரிக்ஷா மீது மோதி கவிழ்ந்ததில் கணவன், மனைவி உயிரிழந்தனர். மேலும் ஒரு குழந்தை மற்றும் முதியவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பஸ்தி ஃபுதியா மேம்பாலம் அருகே, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் கவிழ்ந்த லாரி கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.