ரவுடிகள் போல வக்கீல்கள் - மாணவர்கள் பயங்கர மோதல் | கல்லூரிக்குள் பாட்டில் வீச்சு.. பதற்றம்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அமைந்துள்ள நீதிமன்றம் மற்றும் மகாராஜா கல்லூரி அருகே வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில்10 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற வளாகத்திலிருந்து கல்லூரி வளாகத்திற்குள் கற்கள் மற்றும் மது பாட்டில்கள் வீசியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இரண்டு தரப்பும் மாற்றி மாற்றி புகார் சொல்லி வரும் நிலையில், பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.