Ladakh Gen Z Protest | நேபாளை போல இந்தியாவிலும் கலவரம்? தீ வைத்து கொளுத்தப்பட்ட பாஜக ஆபீஸ்

Update: 2025-09-25 05:56 GMT

லடாக் வன்முறை - காங்கிரஸுக்கு தொடர்பா ? - விரக்தியில் 'ஜென் Z'

லடாக்கில் நடைபெற்ற வன்முறைக்கும் காங்கிரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மாநில அந்தஸ்து கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார். அங்கு பாஜக அலுவலகம் தீ வைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கவுன்சிலர் ஃபண்ட்சாக் ஸ்டான்சின் செபாக் (Phuntsog Stanzin Tsepag) தான் காரணம் என பாஜக தலைவர் அமித் மால்வியா குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதனை மறுத்துள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், ஐயாயிரம் இளைஞர்களை சாலையில் போராட இறக்கும் அளவிற்கு காங்கிரசுக்கு இங்கு செல்வாக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை வாய்ப்புகள் இல்லாத விரக்தியில் 'ஜென் Z' தலைமுறையினரின் அந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்