King Cobra | பார்த்தாலே அலறவிடும் 14அடி ராஜநாகம்.. உயிரை பணயம் வைத்து பிடித்த திக் திக் காட்சி
ஒடிசாவில் கிராமத்திற்குள் புகுந்த 14 அடி நீள ராஜ நாகத்தை வனத்துறையினர் பிடித்துள்ளனர். மயூர் பஞ்ச் பகுதியில் உள்ள பத்மபொகாரி கிராமத்திற்குள் ராஜ நாகம் ஒன்று புகுந்ததாக, பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து பாம்பு பிடி வீரர்களுடன் சென்ற வனத்துறையினர், அந்த ராஜநாகத்தை லாவகமாக பிடித்தனர்.