கேரளாவில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 41 ஆயிரம் கோடி ரூபாய்க்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. 2021 ஏப்ரல் முதல் 2024 டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 41 ஆயிரத்து 138 கோடி ரூபாய்க்கு லாட்டரி சீட்டுகள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் வரி வருவாயாக 11 ஆயிரத்து 518 கோடி ரூபாயும், அரசுக்கு லாபமாக இரண்டாயிரத்து 781 கோடி ரூபாயும் கிடைத்ததாக தெரிய வந்துள்ளது.