Kerala Dog Bite | வீட்டு வாசலில் நின்ற மூதாட்டியை கடித்து குதறிய தெருநாய் - பதற வைக்கும் சிசிடிவி
மூதாட்டியை கடித்து குதறிய தெரு நாயின் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருவாடியூரில் மூதாட்டி ஒருவர் வாசலில் நின்று கொண்டிருந்த போது, தெரு நாய் ஒன்று அவரை கடித்து குதறியது. மூதாட்டியின் அலறலை கேட்டு பக்கத்து வீட்டினர் வந்து நாயை துரத்தினர். இதில் காயமடைந்த மூதாட்டியின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.