Kerala Dog Bite | நாய் கடித்ததில் துண்டான குழந்தையின் காது - ஒட்டவைத்து மருத்துவர்கள் சாதனை
கேரளாவில் தெருநாய்கள் கடித்து துண்டான 3 வயது குழந்தையின் காதை, அறுவை சிகிச்சை மூலம் ஒட்டவைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். எர்ணாகுளம் அடுத்த பரவூரில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடித்து குதறின. இதில், குழந்தையின் காது பகுதி துண்டான நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் ஒட்ட வைத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.