Kerala | CCTV | Theft | AC-ஐ நைசாக அபேஸ் செய்த பெண்கள்.. துபாயில் இருந்து கண்டுபிடித்த ஓனர்..
ஏசி திருடிய பெண்கள் - சிசிடிவி மூலம் துபாயிலிருந்து கண்டுபிடித்த ஓனர்.கேரளாவில் உள்ள பொயினாச்சியில் பூட்டப்பட்ட வீட்டின் முன் வைக்கப்பட்ட ஏசியை கொள்ளையடித்த பெண்களை, துபாயிலிருந்த உரிமையாளர் சிசிடிவி கேமரா மூலம் பார்த்து கையும் களவுமாக பிடித்துள்ளார். வீட்டின் பணியாளர் வெளியே சென்ற நிலையில், அவ்வழியே சென்ற 3 பெண்கள், வீட்டின் முன் வைக்கப்பட்ட ஏசியை திருடியுள்ளனர். வெளிநாட்டில் இருந்த உரிமையாளர் யதேச்சையாக தனது செல்போனில், சிசிடிவி கேமரா காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பணியாளர் மூலம் புகாரளித்த நிலையில், 3 பெண்களையும் கையும் களவுமாக போலீஸார் கைது செய்தனர்.