Karnataka Politics கர்நாடக அரசியலையே உலுக்கி பார்க்கும் விஷயம் - திரியை கொளுத்திய டி.கே.சிவக்குமார்
"வருமான வரித்துறை மூலம் மிரட்டிய பாஜக" - டி.கே.சிவக்குமார் கர்நாடகாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமாவை தடுத்து நிறுத்திய போது துணை முதல்வர் ஆகிறீர்களா? அல்லது சிறைக்குச் செல்கிறீர்களா? என்று வருமானவரித்துறை அதிகாரி மூலம் பாஜக தன்னை மிரட்டியதாக அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேசியுள்ளார். ஆனால் தாம் காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக சிறைக்கு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். பெங்களூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இதனை தெரிவித்துள்ளார்.