Karnataka | கனவில் காட்சி தந்த கடவுள் - இந்துக்களுக்காக ரூ.3 கோடியில் கோயில் கட்டிய இஸ்லாமியர்
கர்நாடகாவில் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் 3 கோடி ரூபாய் செலவில் இந்துக்கோயிலை கட்டி சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழ்ந்துள்ளார். சன்னபட்டனா பகுதியில் அமைந்துள்ள மங்களவாரப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சைதாயித் சாத்தூத் உல்லா சகாப். தன் கனவில் பசவன்னா கடவுள் காட்சி தந்ததாக கூறிய அவர், அதே பகுதியில் 3 கோடி ரூபாய் செலவில் பசவன்னர் ஆலயம் கட்டியுள்ளார். இக்கோயிலின் மூலவர் பிரதிஷ்டை செய்த போது, சகாபும் கலந்து கொண்டு அர்ச்சனை செய்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது