கார்கில் வெற்றி தினம் - பிரதமர் மோடி வாழ்த்து

Update: 2025-07-26 09:11 GMT

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டின் பெருமையைப் பாதுகாக்க தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த இந்தியத்தாயின் துணிச்சலான மகன்களின் இணையற்ற துணிச்சலையும், வீரத்தையும் நமக்கு நினைவூட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

கார்கில் போரின் 26வது நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்