Kamal Haasan | CBFC | திரைப்பட தணிக்கை குழுவை தாறுமாறாக சாடிய நடிகர் கமல்ஹாசன்
திரைப்பட தணிக்கை குழுவை தாறுமாறாக சாடிய நடிகர் கமல்ஹாசன்
மத்திய அரசு தனது விருப்பத்துக்கு ஏற்ப திரைப்படங்களுக்கு தணிக்கை குழுவின் கத்தரிக்கோல் வைப்பது தவறு என நடிகர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கேரளாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், தணிக்கை குழு என்பது வெறும் சான்று வழங்கும் அமைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவான பழைய அமைப்பு என்றும் குறிப்பிட்டார்.
மேலும், நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை சொல்லும் நிலையில் தாம் இல்லை என்றும் கமல்ஹாசன் கூறினார்.