MLA ஓய்வூதியம் கேட்ட ஜெகதீப் தங்கர்- எதிர்கட்சிகளின் மெகா கேள்விக்கு கிடைத்த விடை
எம்.எல்.ஏ. ஓய்வூதியம் கேட்ட ஜெகதீப் தங்கர் - எதிர்கட்சிகளின் மெகா கேள்விக்கு கிடைத்த விடை குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தங்கர் உடல்நலனை காரணம் காட்டி கடந்த மாதம் திடீரென ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் எங்கு இருக்கிறார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் ஓய்வூதியத்திற்காக ஜெகதீப் தங்கர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1993ஆம் ஆண்டு கிஷன்கர் தொகுதி எம்.எல்.ஏவாக ஜெகதீப் தேர்வு செய்யப்பட்ட நிலையில்,. ஒப்புதல் கிடைத்தால், அவருக்கு மாத ஓய்வூதியமாக 43,000 ரூபாய் கிடைக்கும். இது தவிர குடியரசு துணைத் தலைவர் பதவிக்காகவும், ஜெகதீப்பிற்கு ஓய்வூதிய சலுகைகள் வழங்கப்படும்.