Jagan Mohan Reddy | ஜெகன்மோகன் கார் டயரில் சிக்கி தொண்டர் பலி - ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2025-06-28 02:03 GMT

ஆந்திராவில் YSR காங்கிரஸ் தொண்டர் காரில் சிக்கி உயிரிழந்த வழக்கில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகனை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த ஜூன் 18ஆம் தேதி உயிரிழந்த தனது கட்சி நிர்வாகியை ஜெகன்மோகன் பார்க்க சென்றபோது, பலநாடு மாவட்டத்தில் தொண்டர்கள் சூழ்ந்து கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் ஜெகன்மோகனை பார்க்க முண்டியடித்த சிங்கையா என்பவர் கார் டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில், முதல் குற்றவாளியாக டிரைவரையும், இரண்டாவது குற்றவாளியாக ஜெகன்மோகன் பெயரும் FIR-ல் சேர்க்கப்பட்டது.

பின்னர் ஜெகன்மோகன் மீதான FIR-ஐ ரத்து செயக்கோரி YSRCP கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை ஜூலை ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், அதுவரை ஜெகன்மோகனை கைது செய்ய தடை விதித்தது.

மேலும், நல்ல திட்டமிட்டு நடத்தப்பட்ட கும்பமேளாவிலேயே விபத்து நடந்ததை நீதிபதி சுட்டிக்காட்டி, இந்த உத்தரவு பிறப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்