ISRO | இன்று விண்ணில் பாய்கிறது "பாகுபலி" ராக்கெட்... இது எதற்கு தெரியுமா?

Update: 2025-11-02 02:33 GMT

இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த LVM ராக்கெட் மூலம் CMS-03 செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது. கடற்படை, ராணுவத்தின் பணிகளுக்காக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. ஆழ்கடல், கடலோர பாதுகாப்பையும் CMS-03 செயற்கைக்கோள் அதிகரிக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலப்பரப்பிலிருந்து 35 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும் இந்த செயற்கைகோள், ஆயிரத்து 600 கோடி ரூபாயில் மல்டி பேண்ட் உட்பட அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, இன்று மாலை 5.26 மணிக்கு LVM3 ராக்கெட்டானது விண்ணில் இலக்கை நோக்கி பாயவுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்