Infant | Rajastan | பச்சிளங் குழந்தை வாயில் கல்லை திணித்து பெவிகாலால் ஒட்டி தூக்கி வீசிய `பேய்’
ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் வாயில் கல்லை திணித்து, ஃபெவிகால் ஒட்டி கற்களுக்கு இடையே அதை வீசி சென்ற கொடூர தாயை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், திருமணத்தை மீறிய உறவில் அந்தக் குழந்தை பிறந்ததால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்தது தெரியவந்தது. குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.