NDA | Modi | Operation Sindoor | Delhi | "இந்தியா மறக்காது, ஒருபோதும் மன்னிக்காது"
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ராணுவ வலிமை மற்றும் உறுதியான தலைமை மூலம் நீதி வழங்கப்பட்டது என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...
தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் பங்கேற்றனர்.
அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும்,
அதற்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிந்தூர் மற்றும் மகாதேவ் நடவடிக்கைகளின் போது வீரதீர செயல்களைக் காட்டிய நமது ஆயுதப் படைகளின் துணிச்சல் நமது நாட்டைப் பாதுகாப்பதில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டது..
தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,
இந்தக் காலங்களில் பிரதமர் மோடி காட்டிய அசாத்திய தலைமைத்துவத்தை பாராட்டுவதாக தெரிவிக்கப்பட்டது...
இந்தியா பயங்கரவாதத்தை மறக்காது, ஒருபோதும் மன்னிக்காது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும்,
குறிப்பாக இந்திய பெண்கள் சக்தியிடமிருந்து ஆபரேஷன் சிந்தூர் மகத்தான ஆதரவைப் பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டது...
இவ்வாறு இந்தியாவின் தாய்மார்கள் மற்றும் மகள்களுக்கு நீதி வழங்கிய தீர்க்கமான பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்று பொருத்தமாகப் பெயரிட்டது என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டத்தில் பாராட்டப்பட்டது.