India | Russia | 1 நொடியில் முடிக்க இந்தியாவுக்கு ரஷ்யா கொடுக்கும் கம்பீர தேர் -உலகமே எதிர்பாரா மூவ்
ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவிற்கு பக்கபலமாக இருந்த S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்காக ரஷ்யாவிடம் இருந்து பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஏவுகணைகளை வாங்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுதர்சன சக்ரா என அழைக்கப்படும் S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பானது ஆபரேஷன் சிந்தூரின் போது 300 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஐந்து முதல் ஆறு பாகிஸ்தான் போர் விமானங்கள் மற்றும் ஒரு உளவு விமானத்தை வீழ்த்த பயன்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் கூடுதல் S-400 ஏவுகணைகளை கணிசமாக வாங்க இந்திய விமானப்படை முன்வைக்கும் முன்மொழிவை பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதலுக்கு எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது