India | Flight Ticket | விமான டிக்கெட் விலை உயரவே உயராது - வெளியான சூப்பர் அறிவிப்பு
விமான பயணிகளின் முன்பதிவு தேதி எதுவாக இருந்தாலும், ஒரு வழித்தடத்திற்கு ஒரே நிலையான கட்டணத்தில் டிக்கெட் கட்டணம் என்ற திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 13ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை அலையன்ஸ் ஏர் விமான சேவையின் சில வழித்தடங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். உதாரணத்திற்கு டெல்லியில் இருந்து கவுஹாத்திக்கு எப்போது பயணித்தாலும் அதற்கான கட்டணம் ஒரே மாதிரியாக இருக்கும். கடைசி நேரத்தில் பயணம் செய்ய முடிவு செய்து முன்பதிவு செய்தாலும் கட்டணம் உயர்த்தப்படாது.