India Cash Flow | நாட்டில் பணப்புழக்கம் எவ்வளவு உள்ளது? - மத்திய அரசு சொன்ன திகைக்க வைக்கும் தகவல்
"ரூ.38.20 லட்சம் கோடி அளவில் பணம் புழக்கத்தில் உள்ளது" - மத்திய அரசு
நாட்டில் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், டிஜிட்டல் ரூபாய் ஆகியவை சேர்த்து, 38 லட்சத்து 20 ஆயிரத்து 866 கோடி ரூபாய் அளவுக்கு பணம் புழக்கத்தில் உள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாட்டில் பணப்புழக்கம் எவ்வளவு உள்ளது? பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்காக குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட திட்டம் உள்ளதா? என்று திமுக மாநிலங்களவை எம்.பி. கிரிராஜன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு, மத்திய நிதி துறை இணையமைச்சர் கிரிராஜன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், ரிசர்வ் வங்கியின் விவரங்களின்படி, அதனிடம் உள்ள மொத்த கையிருப்பு 49 லட்சத்து 23 ஆயிரத்து 705 கோடி ரூபாயாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
பணப்புழக்கத்தின் மதிப்பு 38 லட்சத்து 20 ஆயிரத்து 866 கோடி ரூபாயாக உள்ளது என்றும்,
பொதுமக்களிடம் உள்ள பணத்தின் மதிப்பு 37 லட்சத்து 22 ஆயிரத்து 292 கோடி ரூபாயும்,
வங்கிகளில் உள்ள வைப்புத்தொகையின் மதிப்பு 2 கோடியே 43 லட்சத்து 46 ஆயிரத்து 478 கோடி ரூபாயும் உள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
2025 ஜூன் 27ஆம் தேதி அறிக்கையின்படி, ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், டிஜிட்டல் ரூபாய் ஆகியவை சேர்த்து 38 லட்சத்து 20 ஆயிரத்து 866 கோடி ரூபாய் அளவிற்கு புழக்கத்தில் இருப்பதாக தெரிவித்த மத்திய அமைச்சர்,
குறைந்த மதிப்புள்ள 10, 20, 50 ரூபாய் நோட்டுகளுக்கான தேவை என்பது, ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை இணைப்பதன் மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும்,
அவற்றை அச்சிடுவது குறித்து ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு கலந்தாலோசித்து, முடிவெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.