India Army Airshow | பிரம்மபுத்திரா நதிக்கு மேல் அலறவிட்ட இந்திய விமானங்கள் - பல்ஸை எகிறவிட்ட காட்சி
பிரம்மபுத்திரா நதிக்கு மேல் பறந்த இந்திய போர் விமானங்கள்... இந்திய விமானப்படையின் 93வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அசாமின் குவஹாத்தியில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் மேல் இந்திய போர் விமானங்கள் பறந்த அற்புதமான காட்சிகள் வெளியாகியுள்ளன. அசாம் ஆளுநர் லட்சுமண பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.