India | Airlines | இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்கள் - மத்திய அரசு அதிரடி
"இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்களுக்கு அனுமதி"
நாட்டில் மூன்று புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தடையில்லா சான்றிதழ்களை வழங்கியுள்ளது. அதன்படி விரைவில் 'அல் ஹிந்த் ஏர்', 'ப்ளை எக்ஸ்பிரஸ்' மற்றும் 'ஷாங்க் ஏர்' ஆகிய மூன்று புதிய நிறுவனங்கள் தங்களது சேவைகளை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகளால், உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துச் சந்தைகளுள் ஒன்றாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை திகழ்வதாக தெரிவித்துள்ளார்."