Ind vs Pak | Operation Sindoor | ``இந்தியாவை இனி தொட பாகிஸ்தான் கண்டிப்பா ரெண்டு டைம் யோசிக்கும்’’
பாகிஸ்தான் இனி இருமுறை சிந்திக்கும் என ராஜ்நாத் சிங் கருத்து
இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட இருமுறை சிந்திக்கும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய கடற்படைத் தளபதிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “எந்தவொரு சவாலான சூழலுக்கும் பதிலளிக்க இந்தியா தயாராக இருக்கும்“ எனக் கூறியுள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் இனி இந்தியாவுக்கு எதிராக எந்த விதமான தவறுதலான சாகச முயற்சியிலும் ஈடுபடுவதற்கு முன், நிச்சயமாக இருமுறை சிந்திக்கும்" என்றும் குறிப்பிட்டார்.