Income Tax Return Filing | வருமான வரி கணக்கு தாக்கல் - இன்று வரை நீட்டிப்பு
2025-26 மதிப்பீட்டு ஆண்டின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31-ஆக இருந்த நிலையில், செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் ஒரு நாள் நீட்டித்து, செப்டம்பர் 16ஆம் தேதி வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.