ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசை - இந்திய வீரர்கள் முன்னேற்றம்
ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டர்கள் சிறப்பாக விளையாடினர். இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 4ம் இடத்தில் நீடிக்கிறார். முதல் டெஸ்ட்டில் 2 இன்னிங்ஸிலும் சதம் விளாசிய ரிஷப் பண்ட், 7ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 5 இடங்கள் முன்னேறி 20வது இடம் பிடித்துள்ளார். மற்றொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 10 இடங்கள் முன்னேறி 38வது இடம் பிடித்துள்ளார்.