"Kargil War-ல் நான், Operation Sindoor-ல் மகன் - ராணுவ குடும்பம் உருக்கம்
ஆபரேஷன் சிந்தூர்= வெற்றி வாகை சூடுவார்கள் - ராணுவ குடும்பம் உருக்கம்
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஆப்ரேஷன் சிந்தூரில் தங்களது மகன் பணியாற்றுவது பெருமைப்பட வைப்பதாக, புதுச்சேரியைச் சேர்ந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்தில் 3-வது தலைமுறையாக பணியாற்றும் இந்த குடும்பத்தில் ஹவில்தார் கமலநாதன் என்பவர் ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றி வருகிறார். பதற்றமான சூழலில், தனது மகன் நாட்டுக்காக சேவை செய்வதில் பெரும் மகிழ்ச்சி என ராணுவ வீரரான கமலநாதனின் தாயார் செல்வி உருக்கமாக கூறினார்...