Hyderabad | ஒரே நாளில் இன்பம், துன்பம் இரண்டையும் அனுபவித்த ஹைதராபாத்
ஐதராபாத்தில் கொட்டித் தீர்த்த கனமழை
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கனமழை பெய்தது. கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, பஞ்சாகுட்டா உள்ளிட்ட பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி போக்குவரத்து பாதித்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இருப்பினும், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.