புரட்டி போட்ட இமயமலை வெள்ளம்... மிதக்கும் பாக்., - வெளியான திக் திக் காட்சி

Update: 2025-08-30 16:33 GMT

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெளுத்து வாங்கிய மழையால் சீக்கியர்களின் புனித ஸ்தலமான கர்தார்பூர் குருத்வாராவை வெள்ளம் சூழ்ந்தது. சீக்கிய குருவான குருநானக் தனது வாழ்நாளின் கடைசி நாட்களை இங்கு கழித்ததால், ஆண்டுதோறும் இந்திய சீக்கியர்கள் கர்தார்பூர் குருத்வாராவுக்கு சிறப்பு அனுமதி பெற்று பயணிப்பது வழக்கம். இமயமலையில் பெய்த கனமழையால் ராவி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் தண்ணீரில் தத்தளிக்கிறது. இதனால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்