கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு - சலசலப்பு
கர்நாடக சட்டப்பேரவையில் உரையை படிக்க மறுத்து பேரவையிலிருந்து ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பாதியிலேயே வெளியேறியதால் சலசலப்பு ஏற்பட்டது....காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹரிபிரசாத், ஆளுநரை தடுத்து நிறுத்த முயன்றதால் சட்டப்பேரவை வளாகமே களேபரமாக காட்சியளித்தது...
கர்நாடகாவில் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதற்கு கண்டனம். கர்நாடக சட்டப்பேரவையில் உரையை படிக்காமல் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் வெளியேறியதற்கு அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கண்டனம் தெரிவித்துள்ளார்... ஆளுநர் விவகாரத்தில் கர்நாடக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதி அளித்துள்ளார்...