Google | 100 பில்லியன் டாலர் லாபத்தில் குளிக்கும் Google.. பெருமிதத்தில் CEO சுந்தர் பிச்சை
100 பில்லியன் டாலரை கடந்த கூகுள் வருவாய்
நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் கூகுள் நிறுவனத்தின் வருவாய் நூறு பில்லியன் டாலரை கடந்து சாதனை படைத்திருப்பதாக அதன் சிஇஓ சுந்தர் பிச்சை பெருமிதம் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன் கூகுளின் காலாண்டு வருவாய் 50 பில்லியன் டாலராக பதிவான நிலையில், தற்போது இரட்டை இலக்கத்தைக் கடந்து சாதனை படைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தின் வரவால் கூகுள் நிறுவனம் துரிதமாக செயல்பட்டு வருவதாகவும், இதற்காக உழைத்த ஊழியர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.