லடாக்கில் வெடித்த Gen Z வன்முறை - பற்றி எரிந்த பாஜக ஆபீஸ்.. 4 பேர் பலி
லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி தலைநகர் லே-யில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூட அதிகாரிகள் தடை விதித்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக மாநில அந்தஸ்தோடு சேர்த்து சுயாட்சியை வழங்கும் ஆறாவது அட்டவணை அந்தஸ்தும் வழங்க வேண்டும் எனக் கூறி லடாக்கில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் 15 பேர் 35 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களில் இருவரின் உடல்நிலை மோசமடைந்ததால் முழு அடைப்பு போராட்டத்திற்கு
Leh Apex Body என்ற இளைஞர்கள் அமைப்பு அழைப்பு விடுத்திருந்த நிலையில், போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது.