Varanasi Crowd | வாரணாசியில் `கங்கா தசரா’ கோலாகலம் - பாவங்களை போக்க குவிந்த பக்தர்கள்
கங்கை நதியில் புனித நீராடிய பக்தர்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கங்கை நதியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். வைகாசி மாதத்தின் வளர்பிறை பத்தாம் நாள், கங்கா தசரா விழாவாக வாரணாசி, ஹரித்வார் உள்ளிட்ட இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கங்கை நதியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்று பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. அதன்படி கங்கை நதியில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.