ஓரினச்சேர்க்கை ஆசையில் வந்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்
உத்தரபிரதேசத்தில் கிரிண்டர் செயலியை பயன்படுத்தியவர்களை உல்லாசத்திற்கு அழைத்து, துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தக்ஷ், பூபேந்திரா, ஜெய் ராகவ் மற்றும் ஹனி ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் கிரிண்டர் செயலியில் நண்பர்களாக அறிமுகமாகி, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை தனியாக அழைத்து, அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கைதானவர்களிடமிருந்து துப்பாக்கி, செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.