ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை எரித்து கொன்ற ஊர் மக்கள் - தப்பிய சிறுவன்..நடுங்கவிடும் காரணம்

Update: 2025-07-08 02:07 GMT

பீகாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் எரித்துக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூர்னியா (Purnea) மாவட்டத்தில் உள்ள டெட்கமா (Tetgama) கிராமத்தில், மாந்திரீக பயிற்சியில் ஈடுபடுவதாக சந்தேகத்தின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அதே பகுதி மக்கள் தாக்கியுள்ளனர். பின்னர், அவர்களை தீ வைத்து எரித்துள்ளனர். அவர்களிடம் இருந்து சோனு என்ற 16 வயது சிறுவன் தப்பித்து, காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து சென்ற போலீசார், எரிந்த நிலையில் 5 பேரின் உடல்களையும் மீட்டு, 3 பேரை கைது செய்துள்ளனர். முக்கிய நபராக கருதப்படும் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். போலீசார் நடத்தப்பட்ட விசாரணையில், அண்மையில் கிராமத்தை சேர்ந்த குழந்தை ஒன்று உயிரிழந்த‌தற்கு, இந்த குடும்ப‌ம் தான் காரணம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தாக்கி கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்