மிஸ்ஸானா உயிரே போய்டும்... பல உயிர்களை காக்க தன் உயிரை பணயம் வைத்த பெண்

Update: 2025-08-24 03:17 GMT

ஆற்றின் குறுக்கே குதித்து மருத்துவம் - செவிலியருக்கு குவியும் பாராட்டு

இமாச்சலப் பிரதேசத்தில் உயிரை துச்சமாக நினைத்து ஆற்றின் குறுக்கே குதித்து, மருத்துவப் பணிகளை மேற்கொண்ட செவிலியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

இமாச்சலப் பிரதேசம் மண்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஹுராங் கிராமத்திற்கு செல்லும் பாதை நிலச்சரிவால் தடைப்பட்டது. இந்த நிலையில் செவிலியரான கமலா தேவி, வெள்ளம் சூழ்ந்த ஆற்றின் குறுக்கே குதித்து ஹுராங் கிராமத்தை அடைந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டார். உயிரையும் பொருட்படுத்தாமல் கடமையைச் செய்த அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்